வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு!!

682

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியா உட்பட பல மாவட்ங்களில் ஊடரங்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு இன்று (25.05.2020) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்துடன் வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயத்தினர் இணைந்து கேவிட்-19 சுகாதாரத்தை மேம்படுத்தல் கிருமி நீக்கும் செயற்பாட்டினை ஆரம்பித்திருந்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் பாதசாரிகள் நடைபாதை , ஆசனங்கள் , கம்பிகள் போன்றவற்றிற்கு கிருமி நீக்கி ம ருந்து தெளிக்கப்பட்டது.

இச் செயற்றிட்டம் வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் திரு.சு.அமிர்தலிங்கம் மற்றும் உத்தியோகத்தர்கள் , வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஸ்ரீனிவாசன் , வவுனியா மாவட்ட சி றுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.கெனடி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றிருந்தன.