இலங்கையில் உணவு வகைகளின் விலைகள் உயர்வு!!

549

உணவு வகைகளின் விலைகள்..

உணவு வகைகளின் விலைகள் உயர்வடையும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.பேக்கரி உற்பத்திகள் மற்றும் ஏனைய உணவு வகைகளுக்கான விலைகள் இவ்வாறு உயர்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேங்காய் எண்ணெய் விலை இரு மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் விலை உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் உணவு வகைகளுக்கான விலைகளை உயர்த்த நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சோற்றுப் பொதிகள், சிற்றுண்டி வகைகள், கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார். பொருட்களுக்கான வரி உயர்வினால் இவ்வாறு உணவு வகைகளுக்கான விலைகளை உயர்த்த நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.