வவுனியா பாடசாலைகளை..
வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதுடன் இரண்டு மாத காலமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இன்று காலை பாடசாலை ரீதியாக பெற்றோர்கள் அழைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்பிரிவு வகுப்பு ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பாடசாலை சென்ற பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கான விடுமுறைக் கால சுய கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டது.
அத்துடன் பாடசாலையில் சிரமதானம் நாளை முதல் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புக்களை வழங்குமாறும் ஒவ்வொரு தினங்களிலும் வகுப்பு ரீதியாக செயற்படுத்தி சிரமதானங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை மீளத் திறந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய ஜூன் மாதம் திறக்கவுள்ள பாடசாலையில் க்டந்த 2 மாத காலமாக பூட்டியிருந்த பாடசாலையில் இம்மாதமே சிரமதானம் செய்து சுத்தப்படுத்துவது பாராட்டதலுக்குரியது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.