ஆப்கானிஸ்தானில் மனைவியை கணவன் தாராளமாக அடிக்கலாம் – புதிய சட்டம்!!

455

Husbandஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை அடித்து துன்புறுத்துவது, கள்ளக்காதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

வீட்டில் மனைவியை கணவர் அடிப்பது சர்வ சாதாரணமான செயலாக அங்கு கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் வீட்டு கௌரவத்தை காப்பாற்றும் வகையில் மனைவி மற்றும் மகள்களை ஆண்கள் அடித்தால் அது தவறு அல்ல. இதுபோன்ற குற்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வரவேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய சட்டத்துக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கௌரவ கொலைகள் என்ற பெயரில் பெண்களை கொல்வது அதிகமாக நடந்துவருகிற நேரத்தில் இதுபோன்ற சட்டம் கொண்டுவந்திருப்பது பெண்களை மிகவும் பாதிக்கும். இதன் மூலம் பெண்கள் உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்.