கொரோனா வைரஸ்..
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை 6.45 மணி நேரம் வரையான தகவல்களுக்கு அமைய இந்த எண்ணிக்கை தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்றைய தினம் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
முதலாம் இணைப்பு : புதிய கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1206 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாலை 4.30 வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் காரணமாக இலங்கையில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர்.
அத்துடன், 712 பேர் குணமடைந்துள்ளனர். 484 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஆபத்தான நிலைமையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என வேல்ட் மீற்றர் இன்ஃபே இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.