வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக விபத்து : ஒருவர் படுகாயம்!!

635

விபத்து..

இன்று(27.05.2020) காலை வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா யாழ் வீதி வழியாக நகரை நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நீதிமன்றம் முன்பாக பயணித்த போது பின்னால் சென்ற முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.