யாழில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு யாழ். புங்குடுதீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.கஜயா ( 24), சந்திரகாந்தன் (27) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.