3 வயது சிறுவன்..
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை கா ப்பாற்றுவதற்காக குடும்பத்தினர் ஆரம்பத்தில் புடவையை வைத்து கா ப்பாற்ற முயன்றுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன், இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்று தங்கியுள்ளார்.
அப்போது அங்கிருந்த விவசாய நிலத்தில் இருந்த சுமார் 120 அடி கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்றில் 3 வயது மதிக்கத்த மகன் விழுந்துவிட்டான். இதனால் அந்த சிறுவனை மீ ட்பதற்காக காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சிறுவன் சரியாக உள்ளூர் நேரப்படி 5 மணிக்கு உள்ளே விழுந்துள்ளான். அதாவது தாத்தா மற்றும் தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக அதன் உள்ளே விழுந்துள்ளான்.
இதைக் கண்ட குடும்பத்தினர் அ திர்ச்சியடைந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்தவுடன், முதலில் புடவையை பயன்படுத்தி மீட்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் குழந்தையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது அந்த ஆழ்துளை கிணற்றின் உள்ளே குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
பூமியின் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அதைச் சுற்றி தோண்டுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், இரவு ஆகிவிட்டதால், விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்கும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு, மூத்த மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று கண்காணித்து வருவதாகவும், சிறுவனை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் போர்வெல்லுக்குள் கேமராக்களைப் பயன்படுத்துவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.