பெருந்தொகையான இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் அறிவிப்பு!!

960

இலங்கையர்களை..

குவைத் நாட்டில் விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருக்கும் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொது மன்னிப்பு காலம் இதுவரையில் இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் சட்டரீதியாக அங்கு தங்கியுள்ள நிலையில் 19ஆயிரம் இலங்கையர்களின் விசா செல்லுபடியாகியுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ளனர்.

இதன் காரணமாக பொது மன்னிப்பு காலத்தில் அவர்களில் அதிகமானோர் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அந்த நாட்டில் தங்கியுள்ள பாரியளவிலான இலங்கையர்கள் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் அரசாங்கம் கொரோனா வைரஸின் போது உலகம் ஏற்றுக் கொண்ட மரபுகளுக்கு அப்பால் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இலங்கை உட்பட வெளிநாட்டு பணியாளர்களை வெளியேற்று போது உரிய சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றாமல், சிறிய இடங்களில் அதிகமானோரை தங்க வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருந்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த நாட்டில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் எதிர்வரும் நாட்களில் குவைத்தில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.