இலங்கை வர எதிர்பார்ப்பவர்களுக்காக..
கொரோனா வைரஸ் தொற்றிற்கு மத்தியில் இலங்கை வர முடியாமல் 21 நாடுகளில் சிக்கியிருந்த 5757 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் சிக்கியுள்ள ஏனைய இலங்கையர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிவிவகார நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் 19ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வருவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையர்கள் யாராவது நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்திருந்தால் அந்த நாட்டிலேயே பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றிருப்பது கட்டாயமாக்குவதற்கு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.