72 வயது நபரை திருமணம் செய்யவுள்ள 27 வயது இளம் பெண்!!

739

27 வயது இளம் பெண்..

அமெரிக்காவில் 45 வயது இடைவெளி கொண்ட நபரை காதலித்து திருமணம் செய்யவுள்ள 27 வயது பெண் தங்களின் பா லியல் வாழ்க்கை தனித்துவமானது என்று கூறியுள்ளனர்.

பொதுவாகவே இப்போது அதிக வயது கொண்ட ஆணோ, பெண்ணோ தங்களை விட வயதில் குறைந்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின் சமூகத்தில் இருக்கும் மக்கள் அவர்களை ஒரு விதமாக பேசுவர்.

ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் அவர்களின் வயது வித்தியாசத்தால், பா லியல் வாழ்க்கை குறித்து கிண்டலாக பேசுவார்கள், அதற்கு அவர்கள் சரியான பதிலடி கொடுப்பர்.

இந்நிலையில் இதே போன்று தான் 27 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் 72 வயது மதிக்கத்தக்க நபரை காதலித்து, நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Rachael Chenault, 27 வயது கொண்ட தாயாரான இவர், John Penzera என்ற 72 வயது நபரை காதலித்து வருகிறார்.

இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் பா லியல் வாழ்க்கை குறித்த கேள்விக்கு, எங்களின் பா லியல் வாழ்க்கை தனித்துவமானது என்று கூறியுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு John Penzera-ஐ பா துகாப்பு நிறுவனத்தில், காவலராக பணிபுரிந்த போது பார்த்ததாகவும், அதன் பின் பழகிய நாங்கள் strip club ஒன்றில் காதலை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் Rachael Chenault தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தாய், தந்தையை விட John Penzera வயதில் மூத்தவராக இருந்தாலும், வயது என்பது வெறும் எண் மட்டுமே, எங்களுக்குள் நம்பமுடியாத நெருக்கமான உறவு உள்ளது. அது மிகவும் நெருக்கமானது, அவரை யாரும் ஒப்பிட முடியாது.

எங்களுக்குள் தனித்துவமான பா லியல் வாழ்க்கை உள்ளது. வயதுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நாங்கள் தன்னிச்சையாக இருக்கிறோம். அவர் நடந்து கொண்ட விதம் அனைத்தும் எனக்கு பிடித்துவிட்டது.

நான் மட்டுமின்றி அவரும் அதை உணர்ந்தார். இருவரும் அதை உணர்ந்தோம். ஆரம்பத்தில் அவர் விவகாரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இதனால் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருந்த இந்த ஜோடி, தற்போது, காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்களின் காதலை John Penzera-ன் 28 வயது மகன் மற்றும் 23 வயது மகள் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் Rachael Chenault குடும்பத்தினர் இவர்களின் காதல் விஷயத்தில் மகிழ்ச்சியடையவில்லை.

அதன் பின் John Penzera-ஐ சந்தித்தவுடன் Rachael Chenault-ன் குடும்பத்தினருக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதி விரைவில் திருமணம் செய்யவுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இது எப்போது நடக்கும் என்று சொல்லமுடியாது என்று அவர்களே கூறியுள்ளனர்.

இதனால் இப்போதைய சூழ்நிலையில் Rachael Chenault தன்னுடைய மகனுடன் ஒரு குடியிருப்பிலும், அதே நேரத்தில் John Penzera பென்சில்வேனியாவின் லாட்ரோபில் ஒரு வீட்டை திருமணத்திற்கு பின் தங்குவதற்காக கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் Rachael Chenault தன்னுடைய மகன் John Penzera-வுடன் நெருங்கி பழகுவதாகவும், இது ஒரு நல்ல முன்மாதிரி என்றும் கூறியுள்ளார். இந்த ஜோடி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இணையவாசிகள் மற்றும் சமூகத்தில் பலர் கிண்டல் செய்யும் விதமாக பேசுவது குறித்து கேட்ட போது, நாங்கள் அதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை.

நாங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். வயது இடைவெளி படுக்கையறையில் உள்ள விஷயங்களுக்கும் தடையாக இருக்கவில்லை. நான் ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து வேறு வழிகளில் கற்றுக் கொண்டிருக்கிறேன், அவர் என்னிடமிருந்து கற்றுக்கொள்கிறார், நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம்.

சில விஷயங்களில் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளன. அது திரைப்படங்கள் தான், அவர் பெரும்பாலும் பழைய திரைப்படங்களைப் பற்றி விளக்குவார், அது எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இருவருக்கும் இடையே இருக்கும் வயது இடைவெளியைப் பற்றி Rachael Chenault-க்கு இருக்கும் ஒரே பயம் விரைவில் John Penzera(அதாவது இறந்துவிடுவார்) இழப்பார்.

இது குறித்து Rachael Chenault-யிடம் கேட்ட போது, அவர் என்றென்றும் வாழப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் இது ஒவ்வொரு நாளும் நான் கவலைப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.