சுருதிஹாசன் விலை மாது கரக்டரில் நடித்து இந்தியில் ரிலீசான படம் டிடே , இப்படத்தில் சுருதி படுக்கை காட்சிகளில் மிகவும் ஆபாசமாக நடித்து இருந்தார். இதை போஸ்டர்களில் அச்சிட்டு வெளியிட்டு இருந்தனர். இணைய தளங்களிலும் பரவியது.
சுருதிஹாசன் துணிச்சலாக நடித்த காட்சிகளை பார்த்து தமிழ் திரையுலகமே வாயடைத்து போனது. அந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தால் பரபரப்பாக ஓடும் என்று தயாரிப்பாளர் கருதினார்.
இதையடுத்து தாவூத் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு சுருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார். டிடே படத்தை என் அனுமதி இன்றி தமிழில் வெளியிடுகின்றனர். ஒப்பந்தத்தில் தமிழில் வெளியிடுவது பற்றி எதுவும் இல்லை.
தமிழில் இப்படத்தை ரிலீஸ் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சுருதிஹாசன் அறிவித்து உள்ளார். சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார். இதுபோல் படத்தில் இயக்குனர் நிகில் அத்வானியும் டப்பிங் செய்து படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து டிடே பட தயாரிப்பாளர்களில் ஒருவரான விவேக் ரங்காச்சாரி கூறும்போது..
டிடே படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டே தீருவேன். படத்தை தமிழில் டப் செய்வது பற்றி, இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான நிகில் அத்வானியிடம் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். இப்போது சுருதிஹாசனை திருப்திபடுத்துவதற்காக எதிர்க்கிறார். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். திட்டமிட்டபடி வருகிற 7ம் திகதி தமிழ்நாடு முழுவதும் இப்படம் வெளியாகும் என்றார்.