ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்து இ றக்க காரணமானவர் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்!!

520

3 வயது சிறுவன்..

தெலங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்துளையை தோண்டிய நபர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில் கோவர்தன் என்பவரின் விவசாய நிலத்தில் மூன்று ஆழ்துளை கிணறுகள் உள்ளது. இந்த ஆழ்துளையை கோவர்தனின் மாமனார் மங்கலி பிக்‌ஷாபதி தான் தோண்டினார். ஆனால் மூன்றிலும் தண்ணீர் வரவில்லை.

இதனிடையே மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கோவர்தன் – நவீனா தம்பதியின் மகன் சாய் வரதன், அதில் விழுந்துள்ளான். இதனை கவனித்த கோவர்தனன் குடும்பத்தினர் குழந்தையை மீ ட்க முயற்சித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 120 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளையில் சிறுவன் மூச்சுத் தி ணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது.

பின்னர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் 12 மணி நேர முயற்சிக்கு பின்னர் சிறுவன் சாய் வரதன் சடலமாக மீட்கப்பட்டான்.

அவன் சடலத்தை பார்த்து பெற்றோர் க தறி து டித்தனர், அவர்களை அங்கிருந்தவர்களால் சமாதானம் செய்யவே முடியவில்லை.