கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’ வங்காலை கடலில் மீட்பு!!

538

கப்பலுக்கு பயன்படுத்தும் போயா..

கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு இன்று மதியம் வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

‘போயா’என அழைக்கப்படும் குறித்த மிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் காணப்படுவதை அவதானித்த மீன்வர்கள் சக மீனவர்களின் உதவியுடன் படகில் கட்டி இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்ட இதனை பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது.