வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை : சிக்கிய உணவகங்கள்!!

884

பொது சுகாதார பரிசோதகர்கள்..

வவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம் (28.05.2020) மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் உணவகங்கள், ம துபானசாலைகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கோவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் யூட் பிரீஸ் (சுகாதார வைத்திய அதிகாரி) , பொது சுகாதார பரிசோதகர்களான வோல்டயன் , எர்சன் றோய் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் நேற்று (28.05.2020) மாலை வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள உணவகங்கள் , ம துபானசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது உணவகங்களுக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர் கை சுத்தம் செய்வதில்லை, கூட்டாக இருந்து உணவருந்துவது, மருத்துவசான்றிதழ் இன்றி பணியாளர்கள் காணப்பட்டமை, காலவதியான உணவுப்பொருட்கள்,

முகக்கவசம் சீராக அணியாமை போன்ற பல்வேறு குறைபாடுகளை பார்வையிட்ட அக்குழுவினர் குறித்த உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் சில உணவகங்களுக்கு எச்சரிக்கையும் வழங்கியுள்ளனர்.