ஊரடங்கை மீறி சுற்றுலா சென்றவர்களை சமூக வலைத்தள ஊடகங்களின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை!!

427

ஊரடங்கை மீறி சுற்றுலா..

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது வினோத சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்ட நபர்களை கைது செய்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தள ஊடகங்களின் உதவியுடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்ட நபர்களை கைது செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனி நபர் இடைவெளியை தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது சுகாதார ஆலோசனைகளை மீறும் நபர்களை கைது செய்வதற்காக சாதாரண உடையில் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.