கணவர் இ றந்து சரிவதை வீடியோவில் பார்த்த 3 குழந்தைகளின் தாயார்  : நடந்த பரிதாபம்!!

615

3 குழந்தைகளின் தாயார்..

ஐக்கிய அமீரகத்தில் இருந்தவாறு விடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே தன் கணவர் இ றந்து சரிவதைப் பார்த்துக்கொண்டிருந்த, மூன்று பெண் குழந்தைகளின் தாயான கேரளப் பெண், இந்தியா திரும்பியுள்ளார்.

ஏழ்மை நிலையில் இருக்கும் தனது குடும்பத்தைக் கா ப்பாற்றுவதற்காக உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் சென்றார் கேரளத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகளின் தாயாரான 37 வயது பிஜுமோள்.

இவருடைய கணவர் ஸ்ரீஜித், 13 ஆண்டுகள் அரபு நாடுகளில் பணிபுரிந்த பின்னர் உடல்நலக் குறைவால் நாடு திரும்பிவிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீஜித், கேரளத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கணவரின் மருத்துவச் செலவுக்காகவும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் சம்பாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் துபாய் சென்றார் பிஜுமோள்.

ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான வேலை என்று அழைத்துச் சென்ற தரகர், கொண்டு சென்றுவிட்ட இடம் மசாஜ் நிலையம். அங்கிருந்த சூழ்நிலை பிஜுமோளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மூன்றே நாள்களில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

பின்னர், தரகரைத் தொடர்புகொள்ள முயன்றால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்துத் தனக்குத் தெரிந்த தோழி ஒருவரின் அறையில் சென்று தங்கிக்கொண்டு வேலை தேடத் தொடங்கினார் பிஜுமோள்.

இதனிடையே, பிப்ரவரி 16 ஆம் திகதியுடன் இவருடைய ஒரு மாத கால சுற்றுலா விசாவும் முடிவுக்கு வந்து, இவர் தங்கியிருப்பதே ச ட்டவிரோதம் என்றாகிவிட்டது. இவருடைய தோழியும் ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். இதனிடையே, இந்தியாவிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து உள்பட அனைத்தும் முடங்கிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் மார்ச் 23 ஆம் திகதி, அவருடைய திருமண நாளுக்கு முந்தைய நாள், கேரளத்திலிருந்த அவருடைய கணவருடன் விடியோ அழைப்பில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோதே, சக்கர நாற்காலியிலிருந்த கணவர் சரிந்து வி ழுந்து உயி ரிழந்தார்.

கணவரின் இ றுதிச் சடங்குகளையும் விடியோ அழைப்பிலேயே பார்த்து விடைகொடுக்க நேரிட்டுவிட்டது. அவருடைய குழந்தைகளும் அருகேயுள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே, பிஜுமோளின் நிலைமை பற்றி அறிய வந்ததும் இந்தியத் தூதரக அலுவலகத்தினர் உள்பட பலரும் உதவ முன்வந்தனர்.

தொடர்ந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான டிக்கெட் பெற்று, வியாழக்கிழமை அவர் துபாய் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு கேரளத்தில் கொச்சிக்குத் திரும்பியுள்ளார்.

கடன் வாங்கிதான் துபாய்க்கு வந்தேன், வேலை கிடைத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துவிடலாம் என நினைத்தேன், இப்படி ஏமாற்றுவார்கள் என நினைக்கவில்லை என்றார் பிஜுமோள்.

எலும்பு புற்றுநோயால் கணவர் பாதிக்கப்பட்டிருந்தார். நான் வெளிநாடு வந்துவிட்ட நிலையில், அவருக்கு மஞ்சள் காமாலையும் ஏற்பட மூளைச் செயல்பாடும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, என் கண் முன்னால் அவர் இ றந்து சாய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றார்.

வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் அமுலில் இருப்பதால் பிஜுமோளுக்கு அவரது ஊருக்கு அருகிலேயே தனித்திருக்க வேண்டிய முகாம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாடு திரும்பினாலும் தனித்திருக்கும் காலம் முடிந்து மேலும் ஒரு வாரம் கழித்துதான் தந்தையை இழந்த மூன்று மகள்களையும் தாய் பிஜுமோள் சந்திக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.