அவனை நம்பி அழைத்த இடங்களுக்கெல்லாம் சென்றேன் : இறுதியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

1021

இளம்பெண்..

தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் மன வேதனை அடைந்த முதுகலை பட்டதாரி பெ ண் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் நல்லவிஜயபுரம் சோழகன்குடிக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அருணா (24). எம்.சி.ஏ. பட்டதாரி. இவரும் சோழகன்குடிக்காடு கீழத்தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் புகழரசன்(30) என்பவரும் உறவினர்கள். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் புகழரசன் வெளிநாட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர் தனது காதலி அருணாவுடன் செல்போனில் பேசி வந்தார். இதனிடையே புகழரசனின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்தனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அருணா மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புகழரசன், அவரது தந்தை அர்ச்சுனன், தாயார் பத்மாவதி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் புகழரசன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டதாகவும், பெற்றோர் நிச்சயம் செய்துள்ள பெண்ணை அவர் திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறி கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் திகதி அருணா தனது உறவினர்களுடன் புகழரசனின் வீட்டுக்கு சென்று தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அருணா, புகழரசன் உறவுக்காரர் என்பதால் அவரை நம்பி காதலித்தேன். அவன் அழைத்த இடங்களுக்கெல்லாம் சென்றேன். சென்னை வடபழனி முருகன் கோவிலில் நாங்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். ஆனால் புகழரசனும், அவரது குடும்பத்தினரும் என்னை ஏ மாற்ற முயற்சிக்கின்றனர்.

புகழரசனுடன் நான் சேர்ந்து வாழ பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று க ண்ணீர் ம ல்க தெரிவித்தார். இதனை தொடர்ந்து அருணாவை பொலிசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நிச்சயம் செய்திருந்த பெண்ணை புகழரசன் நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதன்பிறகு அருணாவிடம் புகழரசன், உன் எ திர்ப்பையும் மீறி நிச்சயித்த பெண்ணை நான் திருமணம் செய்து விட்டேன் என்று செல்போனில் பேசியதோடு திருமண புகைப்படத்தையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதை பார்த்து மன வேதனை அடைந்த அருணா தனது வீட்டின் குளியலறையில் நேற்று காலை தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இதன் காரணமாக அ திர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரின் உடலை எடுத்துச்சென்று புகழரசன் வீட்டின் முன்பு வைத்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புகழரசனையும், அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் சிலர் அ டித்துள்ளனர். புகழரசனின் வீட்டு கண்ணாடி சே தப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பொலிசார் உறவினர்களை சமாதானப்படுத்தி அருணாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும் புகழரசன், அவரது தந்தை அர்ச்சுனன், தாயார் பத்மாவதி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.