திருமணமான பெண்களின் புகைப்படங்களை திருடி இளைஞர்கள் செய்து வந்த அதிர்ச்சி செயல்!!

1424

இளைஞர்கள் செய்த செயல்..

தமிழகத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமணமான பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி, அதை மார்பிங் செய்து, கணவர்களை மி ரட்டி பணம் ப றித்து வந்த இரண்டு பேரை பொலிசார் அ திரடியாக கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க காவல் க ண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு ஒன்றை வைத்துள்ளார். அதன்மூலம் பல முக்கிய வழக்குகளை விரைவாக துப்புத் துலக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பரமக்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது பேஸ்புக்கில் இருந்து திருடிய ம ர்ம ஆசாமி ஒருவன், அதனை ஆ பாசப் படமாக மார்பிங் செய்து, கணவனுக்கு அனுப்பி 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மி ரட்டல் விடுத்து வந்துள்ளான்.

இதனால் இது குறித்து தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதால், பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். அதன் பின் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மி ரட்டல் விடுத்த நபர், தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் பரமக்குடி உலக நாதபுரம் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பது தெரியவந்தது.

பேஸ்புக்கில் குடும்ப பெண்களின் படங்களைத் தேடி எடுத்து அவற்றை மார்பிங் செய்து பணம் பறித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல சென்னை புதுப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராமில் இருந்து அவரது புகைப்படத்தை திருடி, ஆ பாசமாக மார்பிங் செய்து அவரது கணவருக்கு படத்தை அனுப்பி, தனது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தும் படி மி ரட்டியுள்ளான்.

பணம் செலுத்த மறுத்தால் சமூக வலைதளங்களில் மனைவியின் ஆ பாச படத்தை வெளியிடப் போவதாக பிளாக்மெயில் செய்துள்ளான். வங்கிக் கணக்கு எண்ணை வைத்து, அது ராமநாதபுரம் மாவட்டம் என்பதை கண்டறிந்து எஸ்.பி வருண்குமாரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

வங்கிக் கணக்கை வைத்து துப்புத் துலக்கிய பொலிசார், சுகன்யா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு வைத்து மி ரட்டி பணம் பறித்து வந்த உச்சிப்புளியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை மார்பிங் செய்து மி ரட்டி பணம் ப றிக்கும் செயல்கள் தற்போது அதிகளவில் நடப்பதால், பா திக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பப் பெண்கள் தங்கள் செல்பி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நலம் என்றும், இல்லையெனில் வில்லங்கம் எப்போது வேண்டுமானாலும் வீடுதேடி வரலாம் என்று பொலிசார் எ ச்சரிக்கின்றனர்.