உயிரிழந்த 26 வயது இளைஞருக்கு பிரேத பரிசோதனை செய்ய தயாரான மருத்துவர்கள் : ஊழியர் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

1532

உயிரிழந்த 26 வயது இளைஞருக்கு..

இந்தியாவில் மருத்துவர்களால் இ றந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்ட நபருக்கு பிரேத பரிசோதனை நடக்கவிருந்த நிலையில் அவர் உ யிருடன் இருப்பது தெரியவந்தது அங்கிருந்தவர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஓரன் (26). இவர் தனது வீட்டு கூரையை மாற்றும் பணியை செய்து கொண்டிருந்த போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து உடனடியாக குடும்பத்தார் ஓரனை தூக்கி கொண்டு அருகிலிருந்த சுகாதார மையத்துக்கு ஓடினர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓரன் ஏற்கனவே இ றந்துவிட்டதாக உறுதி செய்து RIMS மருத்துவமனைக்கு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லுமாறு கூறினார். பின்னர் ஓரன் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் அங்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தயாரானார்கள்.

அப்போது ஓரனின் இதயம் துடிப்பதை பார்த்த ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்து இது குறித்து மருத்துவர்களிடம் கூறினார். இதை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலன் இல்லாமல் ஓரன் உயிரிழந்தார்.

இது குறித்து ஓரன் குடும்பத்தார் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியமே அவர் மரணத்துக்கு காரணம். ஓரன் இறந்துவிட்டதாக கூறப்பட்ட பின்னர் 5 மணி நேரத்துக்கு அவர் உயிர் இருந்துள்ளது.

ஆனால் பயண நேரம், RIMS மருத்துவமனை பிணக்கிடங்கில் அவர் வைக்கப்பட்டதிலேயே நேரம் வீணாக சென்றுவிட்டது. முதலிலேயே மருத்துவர்கள் இதை கண்டுபிடித்திருந்தால் அவர் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என கூறியுள்ளனர்.

ஓரன் இறந்துவிட்டார் என கூறிய மருத்துவர்கள் சார்பில் பேசிய நிர்வாகத்தினர், பரிசோதனையின் போது ஓரனின் நாடி மற்றும் இதயத்தில் துடிப்பு இல்லை என்பதாலேயே அவர் இறப்பை உறுதி செய்தோம் என கூறியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.