டெல்லி முதலமைச்சராக அண்மையில் பதவி ஏற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என முன்னாள் ஆட்டோ சாரதி ஒருவர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவரான ஷர்மாவிற்கு வந்த தொலை பேசி அழைப்பில் பேசிய நபர் ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜந்தர் மாந்தருக்கு வரும்போது அவரை சுட்டுகொல்வென் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்த ஷர்மா பின்னர் தொலைபேசியில் பேசியது முன்னாள் ஆம் ஆத்மி ஆதரவாளர் என தெரிந்ததும் அவர் மீது எந்த புகாரும் அளிக்காமல் அவரை விட்டுவிட சொன்னதாக தெரிகிறது.
பொலிசார் விசாரித்ததில் தொலைபேசியில் பேசியது ராம் நாராயணன் பகத் என்னும் 40 வயது நபர் என்பதும் இவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ சாரதிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது 17 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததாகவும், இன்று வரை அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படாததால் இந்த கொலை மிரட்டல் வந்திருக்ககூடுமென கருதப்படுகிறது.
மேலும் தொலைபேசியில் பேசிய நபர் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.