பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் புதிய நடைமுறை!!

1050

புதிய நடைமுறை..

அடுத்த வருடம் முதல் இலங்கையின் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றுக்கு 35 மாணவர்களை மாத்திரமே அனுமதிப்பது என்று கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இதற்கான ஒழுங்குவிதிகள் விண்ணப்பங்களுடன் விநியோகிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் தரவுகளை அவர்களின் பெற்றோர் ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் பதிவு அஞ்சல் மூலம் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

முதலாம் வகுப்புக்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான ஒழுங்குவிதிகள் மற்றும் விண்ணங்கள் என்பன கல்வி அமைச்சின் இணையத்தில் (www.moe.gov.lk) உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.