கருவேப்பங்குளம் பகுதியில்..

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இ ளைஞரின் ச டலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் இரவு குறித்த இளைஞரை நீண்ட நேரம் காணாத நிலையில் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது வீட்டின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் அவர் இருப்பதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் முன்னரே அவர் இ றந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





