பால் வாங்க அலைந்த தந்தை : ரயிலிலேயே 4 வயது கு ழந்தை உ யிரிழந்த சோ கம்!!

616

பால் வாங்க அலைந்த தந்தை..

இந்திய மாநிலம் பிகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், பால் கிடைக்காததால் 4 வயது கு ழந்தை உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்கள் உடைமைகளுடன் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பலர் சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அவ்வாறு புலம் பெயரும் தொழிலாளர்கள் வறுமை, பசி காரணமாக இ றக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சமீபத்தில் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் தாய் இ றந்தது தெரியாமல் கு ழந்தை தனது தாயை எழுப்பும் விடியோ பார்ப்போரை கல ங்கச் செ ய்தது.

இதையடுத்து, பிகார் ரயில் நிலையத்தில் பசி காரணமாக பால் கிடைக்காததால் 4 வயது கு ழந்தை உ யிரிழந்துள்ள மற்றொரு சோ க ச ம்பவம் நிகழ்ந்துள்ளது.

தில்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பிகாருக்கு தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் புறப்பட்டுள்ளார் மசூத் ஆலம். வெயில் மற்றும் பசி காரணமாக குழந்தை நெடு நேரம் அழுதுள்ளது.

ரயில் முசாபர்பூர் நிறுத்தத்தில் நின்றபோது மசூத், குழந்தைக்கு கொடுக்க பால் வாங்க அலைந்துள்ளார். ஆனால், ரயில் நிலையத்தில் கிடைக்கவில்லை. அங்குள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தெரிவித்தும் பலனில்லை.

இறுதியில் குழந்தை ரயிலிலேயே உ யிரிழந்தது. இந்த சம்பவம் மற்றும் குழந்தையின் தந்தை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால், முசாபர்பூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னரே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தை இ றந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.