குடும்ப வறுமையை போக்க தினமும் 10 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று வடை, சமோசா விற்கும் சிறுவன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

587


நெகிழ்ச்சி சம்பவம்..



தஞ்சாவூரில் 12 வயது சிறுவன் சைக்கிளில் தினமும் சுமார் 10 கி.மீ வரை வடை, சமோசா போன்ற பலகாரங்களை விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தஞ்சாவூர் மானோஜிப்பட்டி என்ற கிராமம் உப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள், 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.




இந்நிலையில் வரதராஜனுக்கு திடீரென ஏற்பட்ட நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். குடும்பம் வருமானமின்றி தவிக்கும் நிலையில் சுமதி சிறு சிறு வேலைகளுக்கு சென்று சமாளித்து வந்துள்ளார்.


இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அவர்கள் குடும்பத்தை கடுமையாக பாதித்துள்ளது. கடும் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். இதனை அறிந்த அவர்களது மூத்த மகன் தான் வேலைக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

உடனே நீ வேலைக்கு செல்ல வேண்டாம், நான் வடை, போண்டா, சமோசா போன்றவை செய்து தருகிறேன் அதனை நீ விற்று வருமானம் கொண்டு வா என்று சுமதி கூறியுள்ளார்.


இதனையடுத்து தாய் சுமதியின் பேச்சை கேட்டு 12 வயது சிறுவன் சைக்கிளில் தெரு தெருவாய் பலகாரங்களை விற்று அதன் மூலம் தினமும் ரூ.100 சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறான். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.