கொரோனா அ ச்சத்தால் பெற்ற தாயை வீட்டிற்குள் சேர்க்க மறுத்த மகன்கள் : உணவு இல்லாமல் சாலையில் வசிக்கும் சோ கம்!!

1216

தாயை வீட்டிற்குள் சேர்க்க மறுத்த மகன்கள்..

65 வயதான சியாமளா இவர் தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் உள்ள கிஷான் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். சியாமளா மகாராஷ்டிராவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

பின் ஊரடங்கு உ த்தர வு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. தற்பொழுது ஊரடங்கு உ த்தர வு தளர்வு காரணமாக தனது மகன் வீட்டுக்கு ரயில் மூலம் வந்துள்ளார். அவரது மகன் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று சொல்லி உனக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று பயந்துகொண்டு வீட்டிற்குள் வரவேண்டாம் என்று கதவை சாத்தி கொண்டார்.

அவரது மகன்களின் இந்த முடிவால் தான் எங்கு செல்வது என்று தெரியாமல் தான் வசிக்கும் வீதியில் இருந்துள்ளார். கு டி க்க நீரும், உணவும் இல்லாமல் தவித்து வந்தார். அவருக்கு உள்ளூர் மக்கள் உண்ண உணவும், நீரும் கொடுத்து வருகிறார்கள்.

அவரது மகன்கள் மருத்துவமனையில் தனது தாயிற்கு கொரோனா தொற்று இருக்கா இல்லையா என்று பரிசோதனை செய்து பார்க்காமல் அவரை வெளியே அனுப்பியது தவறு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.