மனைவியின் தாலியை அடகு வைத்து கொடுத்தேன் : அவள் பணத்தில் படித்தேன் : மாற்றுத்திறனாளியின் பரிதாப நிலை!!

875


பரிதாப நிலை..



தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் குடும்ப வறுமைக்காக மனைவியின் தாலியை அடுகு வைத்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.



சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றறுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர், மனைவி கூலி வேலை பார்த்து கொடுத்த பணத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.




பேராசிரியராகப் பணிபுரிந்த குடும்ப வறுமையை விரட்டலாம் என்று சென்னைக்கு வந்த இவருக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில், மாடிப்படிகளில் ஏறிச்சென்று வகுப்பெடுக்க முடியாது என்பதால் சுரேஷ் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளார்.


இதையடுத்து, பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் வேலைக்கு சேர்ந்த இவர், அங்கே படிக்கட்டில் தடுமாறி விழுந்ததால் அப்போதில் இருந்தே இவரின் வாழ்க்கையும் தடுமாற துவங்கியுள்ளது.

சுமார் 4 மாதங்களாக வேலையில்லாமல் தவித்து நிலையில், இந்த கொரோனாவின் பொது மு டக்கம் இவரது குடும்பத்தை மேலும் வறுமையில் தள்ளியுள்ளது.


சாப்பிடும் உணவிற்குக் கஷ்டம் என்ற நிலைக்கு வந்ததால், திருமண மண்டபங்கள் மூலம் முகூர்த்தப் பானையைச் செய்துகொடுத்து வருகிறார். இருப்பினும் வாடகை கொடுக்க பணம் இல்லாததால், தனது மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்துள்ளார்.

தனக்கு அரசு உதவியின் மூலம் வேலை கிடைத்தால் தனது குடும்பத்திற்கு மிகவும் நன்மையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.