சித்தார்த் என்றாலே காதல் மற்றும் மென்மையான கதைகளுக்குத்தான் பொருந்துவார் என்றொரு இமேஜ் உருவாகியுள்ளது.
அவரோ அந்த இமேஜை மாற்ற வேண்டும் என தலைகீழாக நிற்கிறார். அதனால் ஜிகர்தண்டா படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார்.
மதுரைக்கார இளைஞராக இந்த படத்தில் நடிக்கும் சித்தார்த் லுங்கி கட்டியபடி பட்டையை கிளப்பியுள்ளாராம். அவர் கூறுகையில், காதல் படங்களில் நடித்து போரடித்து விட்டது. இதனால் இப்போதெல்லாம் மாறுபட்ட வேடங்களில் தான் நடிக்கிறேன்.
தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்கள் வெளியானதும் என் மீதுள்ள சாக்லேட் பாய் இமேஜ் மாறும் என்கிறார்