ஒரு மாதத்தின் பின்னர் இலங்கையில் சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள்!!

1249


கொரோனா நோயாளிகள்..



இலங்கையில் இதுவரை மொத்தமாக 1643 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.



நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் இராணுவ சிப்பாய்களாகும். அண்மையில் கொரோனா தொற்று உறுதியாகிய இராணுவ அதிகாரியுடன் செயற்பட்ட இருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தொற்று நோய் பிரிவின் இயக்குனர் தெரிித்துள்ளார்.




குறித்த இருவருக்கு ராஜகிரிய ஆயுர்வேத நிலையத்தில் வைத்து கொரோனா தொற்றியுள்ளதாக கண்டுபிடி்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக முல்லைத்தீவு மற்றும் கற்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இராணுவ சிப்பாய்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கடந்த ஒரு மாத காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கடற்படை சிப்பாய்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று ஏற்பட்டமை அடையாளம் காணப்பட்டது.

எனினும் நேற்றைய தினம் சமூகத்திற்குள் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.