பாலியல் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலை அதிபர் ஒருவரை விளக்க மறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புத்தள நவோதய வித்தியாலயத்தில் கடமையாற்றி வரும் அதிபருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடலிகே சுனில் சாந்த என்பவரை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,
பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் குறித்த பெண்ணை சுய விருப்பின் அடிப்படையில் வெல்லாவய பிரதேச ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி அறிந்து கொண்ட குறித்த பெண்ணின் கணவரான இராணுவ உத்தியோகத்தர் புத்தள பொலிஸில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரை முதலில் விசாரணை செய்த பொலிஸார் பெண் சுய விருப்பில் அதிபருடன் ஹோட்டலுக்கு சென்றதாகத் தெரிவித்து பிரச்சினையை தீர்த்து வைத்தனர். எனினும் பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தி அடையாத குறித்த பெண்ணின் கணவர், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி குறித்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்து வெள்ளவாய பொலிஸார் அதிபரை கைது செய்துள்ளனர்.