வவுனியா கனகராயன்குளத்தில் அடாத்தாக அமைக்கப்பட்ட உணவகத்தை அகற்ற உத்தரவு!!

1980


தாவூத் உணவகம்..


வவுனியா கனகராயன்குளம் ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள சர்சைக்குரிய தாவூத் உணவகத்தை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.உணவகம் அமைந்துள்ள காணியை காலி செய்யுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் அறிவுறுத்தல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,


அரச காணியில் அதிகாரமில்லாமல் ஆட்சிசெய்தல் அல்லது குடியிருக்கிறீர் எனக் கருதுவதால் 1979 ஆண்டின் அரச காணிகள் ஆட்சி மீளப்பெறுதல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 7 மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணியை காலி செய்யும்படியும்,

அக்காணியை காலியான நிலையில் பிரதேச செயலரிடமோ, அல்லது குடியேற்ற உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தரிடமோ ஒப்படைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த காணியை நபர் ஒருவர் அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், இது குறித்த சர்ச்சையில் முன்னாள் போராளியொருவரையும் அவரது உணவகத்தை சேர்ந்தவர்கள் தாக் கியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் பொலிசாரும் பக்கச்சார்பாக நடப்பதாக அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விமர்சனம் தெரிவித்திருந்தமை குரிப்பிடத்தக்கது.