சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் தங்கம் கொண்டு வர முயற்சித்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை, இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.
31 தங்க பிஸ்கட்டுக்களை குறித்த நபர் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில்கொண்டு வர முயற்சித்துள்ளார்.
இந்த தங்கத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
40 வயதான கொம்பனித்தெருவை வசிப்பிடமாக்க் கொண்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தங்க பிஸ்கட்டுக்களின் எடை மூன்று கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எயார் அரேபிய விமானத்தின் மூலம் சாஜாவிலிருந்து குறித்த நபர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.