நடிகைகளுடன் தொடர்பு : அதிகாரி வேடமிட்டு இளைஞன் செய்த மோசமான செயல்!!

769


அதிகாரி வேடம்..



அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் மோ சடியும் செய்து அந்த பணத்தில் இளம் நடிகைகளுடன் ஒன்றாக இருந்த போலி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.



தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தனராஜ் – டெய்சி. இருவருமே ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சைமன் ஆந்திராவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் பேராசிரியாக வேலை பார்த்து வருகிறார்.




இந்த நிலையில் டெய்சிக்கு ஜார்ஜ் பிலிப் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் சென்னையில் உள்ள சுகாதாரத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.


அரசு பணியில் இருப்பதால், டிஎன்பிஎஸ்சியில் வேலை பார்த்து வரும் நவாப்பன் உள்ளிட்டோரை நன்றாக தெரியும், அவர்கள் மூலமாக நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக டெய்சியிடம் கூறி உள்ளார்.

இதை நம்பிய டெய்சியும் தன்னுடைய மருமகன், சகோதரியின் மகன், உறவினர் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தர முடியுமா என்று கேட்டுள்ளார்.


அதற்கு ஜார்ஜ் ஒப்புக்கொண்டதுடன் ஆளுக்கு 5 லட்சம், அதாவது 3 பேருக்கும் 15 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படியே டெய்சியும், பணமும், சர்டிபிகேட்டுகளும் தயார் செய்து காத்திருந்தபோது, ஜார்ஜும், நவாப்பனும் ஒரு காரில் அதிகாரிகள் கெட்டப்பில் சென்றுள்ளனர்.

சுழல் விளக்கு ஜீப்பில் இருவரும் இறங்கி வருவதை பார்த்த டெய்சியும் அதிகாரிகள் என்றே நம்பி பணத்தை தந்துள்ளார். பணி நியமன ஆணை எங்கே என்று கேட்டபோது, 2 பேருமே தாங்கள் வந்த ஜீப்பிலேயே அங்கிருந்து மா யமாகியுள்ளனர்.

இதனால் அ திர்ச்சி அடைந்த டெய்சி, பொலிசாருக்கு உடனே புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுதும் தீவிர க ண்காணிப்பு நடத்தப்பட்டது.

தொடர்ந்து எஸ்பி பட்டினம் பகுதியில் ஜார்ஜ், நவாப்பனை கைது செய்தனர். விசாரணையில், நாவப்பன் செங்கம் பகுதியை சார்ந்தவர் என்பதும், ஐஏஎஸ் அதிகாரி வேஷமிட்டதும் தெரியவந்தது.

உயர் அதிகாரிகள் என்று ஏமாற்றி பலரை நாவப்பன் மோ சடி செய்ததும் தெரியவந்தது. இவருக்கு செங்கத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர்தான் மோசடிக்கு உதவி உள்ளார்.

இந்த மோ சடி பணத்தை வைத்து கொண்டு இவர்கள் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் இருந்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் அவர்களது ஸ்மார்ட் போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. திரைப்படம் எடுக்க போகிறோம் என்று சொல்லியே அந்த நடிகைகளை வலையில் விழ வைத்துள்ளனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக இவர்கள் ஏமாற்றி பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.