ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!!

1622

அரச விடுமுறை..

எதிர்வரும் ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வார இறுதியில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இதுவரை வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவதால், வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தேவையில்லை என பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் பொசோன் போயா தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் மாலை முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.