நைஜீரியாவில் மனித இறைச்சி விற்பனை செய்தவர்கள் கைது!!

496

Arrestநைஜீரியாவில் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்–ஒக்வுடு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக ஒனித்ஷா பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

உடனே பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பையில் 2 மனித தலைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மனிதர்களை கொன்று இறைச்சி சமைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர். எனவே ஹோட்டல் உரிமையாளர், 6 பெண் ஊழியர்கள், 4 ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.