மாணவியை பலாத்காரம் செய்து கொன்று பிணத்துடன் சுற்றிய தம்பதிகள்!!

496

Abuse1இத்தாலியில் ஈரானிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இந்திய தம்பதியர், அந்த பெண்ணின் சடலத்தை சூட்கேசில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்திய தம்பதிகள் ராஜேஷ்வர் சிங் (29) மற்றும் கங்காதீப் கவுர் (30) . இத்தாலியின் மிலன் நகரில் வசித்துவரும் இவர்கள் ஆடை வடிவமைப்பாளர்களாக உள்ளனர்.

இவர்களிடம் ஆடை வடிவமைப்பாளராக பயிற்சி பெற வந்த ஈரானை சேர்ந்த மெஹ்பாப் அஹட்சவோஜி (29). இந்தப் பெண்ணும் அவர்களுடனே ஒன்றாக தங்கியிருந்திருக்கிறார்.

அப்போது மெஹ்பாப்பை தங்களுடன் செக்ஸில் ஈடுபடும்படி அந்தத் தம்பதி வற்புறுத்தவே இதற்கு மெஹ்பாப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து கட்டாயமாக பலாத்காரம் செய்த அந்த தம்பதியர் இருவரும் மெஹ்பாப்பின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.



பின்னர் அவரது நிர்வாண உடலை ஒரு சூட்கேசில் அடைத்து லெக்கோ நகரில் உள்ள ஏரியில் வீச ரயிலில் எடுத்து சென்றுள்ளனர். கால்வாயில் சடலம் ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் மீண்டும் வெனிஸ் நகருக்கு ரயிலில் எடுத்துச் செல்ல தீர்மானித்தனர்.

பிறகு அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு திரும்பிவிட்டனர். ஒரு வாரம் கடந்த நிலையில் மெஹ்பாப்பின் சடலமானது லிடோ தீவு அருகே பொலிசார் கண்டெடுத்தனர்.

கைரேகை நிபுணர்கள் அவரது சடலத்தை சோதனை நடத்தினர். இதில் கொலையாளிகளின் கைரேகை பற்றிய விவரம் தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் ராஜேஷ்வர் சிங் மற்றும் கங்காதீப் கவுர் ஆகிய இருவரும் சூட்கேசுடன் வந்தது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது முதலில் மறுப்பு தெரிவித்த அவர்கள் பிறகு செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.