புகையிரதத்தில் பயணம் மேற்கொள்ள தயாராக இருப்போருக்கு முக்கிய தகவல்!!

760

புகையிரதத்தில் பயணம்..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முற்றாக தடைப்பட்டிருந்த பொது போக்குவரத்து நாளை மறுதினம் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் பொது போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பினாலும், ரயில் பயணங்களின் போது கட்டுப்பாடுகள் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ளததை போன்று ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைய மாத்திரமே பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.

அதற்கமைய ரயிலில் பயணிக்க எதிர்பார்க்கும் அனைத்து பயணிகளுக்கு சேவை வழங்க முடியும் என ஊறுதியளிக்க முடியாதென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் பயணத்திற்காக ஆசனம் ஒதுக்கிக் கொள்ளும் முறை தொடர்ந்து செயற்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலின் பின்னர் இதுவரையில் விசேட நேர அட்டவணையின் கீழ் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் திங்கள் முதல் சில ரயில்களை தவிர்த்து வழமையை போன்று இயங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.