வவுனியாவில், வடக்கு இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி!!

604

USAஅமெரிக்க பசும்பிக் படையினரின் 4ஆம் மனிதாபிமான கண்ணிபவடி பெயற்குழு (Humanitarian Mine Action Team) இரண்டு வார பயிற்சி ஒன்றை இன்று வவுனியாவில் நிறைவிற்கு கொண்டுவந்தது.

பூ ஒய இராணுவ முகாமில் நடைபெற்ற இப்பயிற்சியின் போது இலங்கையின் இராணுவ கண்ணி வெடி அகற்றும் பிரிவிற்கு, அமெரிக்க HMA குழுவின் மருத்துவ, கால்நடை மருத்துவ மற்றும் வெடிக்கும் தளபாடங்கள் குறித்த நிபுணர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

இதன்போது இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்களின் படத்தொகுப்புக்கு அமைய தற்பொழுது உள்ள கண்ணிவெடி அகற்றுபவர்களுக்கு மறு சான்றிழலும் வழங்கப்பட்டது.

2003 முதல் 2013ஆம் ஆண்டு வரை அமெரிக்க அரசாங்கம் 4.64 பில்லியன் ரூபா இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்ற வழங்கியுள்ளது.

இந்த வருடத்தில் கண்ணி வெடி அகற்றும் கருவிகள் மற்றும் பயிற்சிகளுக்கு மேலதிகமாக 353 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.