நண்பர்களுடன் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு!!

1118

எம்.டி.அரூஸ்…

ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரதங்கடவல குளத்துக்கு நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி கா ணாமல் போன நிலையில் இன்று ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர் ஹொரவபொத்தான – 100 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.டி.அரூஸ் (30 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து சக நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச் சென்றபோது தாமரை பூவை பறிப்பதற்காக நீந்திச் சென்ற போது இவர் நீரில் மூழ்கி கா ணாமல் போயிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கா ணாமல்போன இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார் கடற்படையினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.