வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு வானூர்தி மூலம் மலர் தூவிய விமானப்படையினர்!!

786


வற்றாப்பளை கண்ணகை அம்மன்..


வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.கொரோனா வைரஸ் காரணமாக வற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.


இதன்போது, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவிய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.


இதனிடையே, நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.