ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு : மனைவி பரபரப்பு புகார்!!

451

James Vasanthanதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் மனைவி சுகந்தி நேற்று பிற்பகல் 1 மணிக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார்.

அவர் பொலிசிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நான் சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கிறேன். எனக்கும், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கடந்த 1991ம் ஆண்டு திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. 23 வருடங்கள் ஆகிவிட்டது.

எங்களுக்கு ஷில்பா என்ற மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். ஆனால், எனது கணவன் ஜேம்ஸ் வசந்தனுக்கு அநேக பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவியான ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார். ஆனால் தற்போது அவரையே தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார். உண்மையான மனைவி நான் உயிரோடு இருக்கும்போது என்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது எனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.



இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.