கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் கனடாவில் வந்து குடியேறுகின்றனர்.
இந்நிலையில் கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இரட்டை குடியுரிமையை திரும்ப பெற முடியும்.
மேலும் விண்ணப்பம் சமர்பித்த நபர்களின் பொது அறிவு, ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான புலமைகள் முதலில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரவுத்துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் கூறுகையில், கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே கனடிய குடியுரிமையை பெற்று விட முடியாது.
அரசாங்கத்தின் நடிவடிக்கைகள் அனைத்தும் இரட்டை குடியுரிமை பெற்ற நபர்களை குறிவைத்தே உள்ளது. பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களாக இருப்பின், குடியுரிமை பறிக்கப்படும்.
குடியுரிமையை பெறுவதற்கு ஆறு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும், இதில் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கனடாவில் வசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் மோசடிகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும், கனடிய குடியுரிமைகளின் மதிப்பை வலுப்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் எனவும் தெரிவித்துள்ளார்.