வவுனியா ஓமந்தை அபிவிருத்தி தொடர்பாக ஓமந்தைக்குச் சென்ற அமைச்சர் டக்லஸ் கலந்துரையாடல்!!

1162

ஓமந்தை பகுதிக்கு கடந்த 9ம்திகதி காலை வருகை தந்த அமைச்சார் டக்லஸ் தேவானந்தா ஓமந்தையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளார்.

கடந்த 9ம்திகதி காலை 8மணிக்கு ஓமந்தை தேசிய மைதானத்திற்கு முதலில் சென்ற அவர் அங்கு விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் பார்வையாளர் அரங்கு உட்பட பல்வேறு கட்டிடங்களை பார்வையிட்டார்.

2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் புனரமைப்பு பணி பூர்த்தி செய்யப்படாமைக்கான காரணங்களை வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சிடம் தொடார்பு கொண்டு இடைநிறுத்த காரணமாக இருந்த நிதியை பெற்று புனரமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிபபேன் என உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து ஓமந்தை பகுதியில் ஊடகவியலாளர் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட்டதுடன் அதற்கான வீட்டுத்திட்ட பணி குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள கலாச்சார மத்திய நிலையத்தினை பார்வையிட்டு அதன் இறுதிக்கட்ட அபிவிருத்திப்பணி குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் தொடார்பு கொண்டு அபிவிருத்தி குறித்து உரையாடியுள்ளார்.

தொடர்ந்து ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு அதன் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான முயற்சிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திலீபன், ஓமந்தை பொறுப்பாளர் வாகீசன் மற்றும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியைச் சேர்ந்த ஆய்வாளர் சு.வரதகுமார், கலைஞர் தமிழருவி த.சிவகுமார் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களான அமலன் மற்றும் கமலன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.