கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

1397

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில்..

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று(13.06.2020 காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முறிகண்டி திசையிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதே திசையில் பயணித்த மற்றுமொரு வாகனத்தை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். அண்மைய நாட்களாக குறித்த பகுதியில் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.