இலங்கைக்குள் நுழையும் இந்திய கொரோனா நோயாளிகள் : புலனாய்வுப் பிரிவு விடுக்கும் எச்சரிக்கை!!

654

கொரோனா நோயாளிகள்..

கொரோனா தொற்றுக்குள்ளான இந்தியர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழையும் ஆபத்து உள்ளதாக புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நபர்கள் படகு மூலம் கடல் வழியாக மன்னார், யாழ்ப்பாணம், சிலாபம், புத்தளம் போன்ற பிரதேசங்களுக்கு நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதனால் இந்திய நாட்டவர்கள் பலர் தொழிலை இழந்துள்ளதுனர். உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதென புலனாய்வு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக முறையில் கொரோனா கட்டுப்படும் நிலையில் இவ்வாறான முறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் நாட்டிற்குள் நுழைந்தால் அது பாரிய ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தி விடும் என புலனாய்வு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.