நடிகர் சுஷாந்த்தின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது மைத்துனி மரணம் : தொடரும் சோ கம்!!

8091


மைத்துனி மரணம்..நடிகர் சுஷாந்த் சிங் த ற்கொ லை செய்தியே இன்னும் மறக்க முடியாமல் இருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் மைத்துனி உ யிரிழந்துள்ள சம்பவம் மேலும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் தன்னுடைய 34 வயதில், மும்பையில் இருக்கும் வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டார். அவரின் ம ரண செய்தி, ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையே அ திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சுஷாந்த் சிங்கை பாலிவுட் திரையுலகம் அங்கிகரீக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் உறவினரும், சகோதரரின் மனைவியுமான சுதா தேவி தன்னுடைய சொந்த ஊரான பீகாரில் உ யிரிழந்தார். சுஷாந்த் சிங்கிற்கு இங்கு இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது, அவர் உ யிரிழந்துவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, சுஷாந்த் சிங்கின் ம ரண செய்தியை கேட்டு, அவர் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார். ஏற்கனவே நீண்ட நோயை கொண்டிருந்த அவர், தொடர்ந்து சுஷாந்த் சிங்கையே நினைத்தபடி இருந்துள்ளதால் அவர் உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை 5 மணிக்கு உ யிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்படி அடுத்தடுத்து இரண்டு ம ரணங்கள் நிகழ்ந்துள்ளதால், சுஷாந்த் சிங்கின் ஒட்டு மொத்த குடும்பம் மற்றும் உறவினர்கள் மீளாத் துயரில் உள்ளனர்.

6 ஆண்டுகளாக நடிகர் சுஷாந்துடன் காதலில் இருந்த பெண் : இறுதிச்சடங்கில் முகத்தை மூடியபடி வந்த நடிகை!!

நடிகர் சுஷாந்த் சிங் இறுச்சடங்கில் அவரின் காதலி என கருதப்படும் நடிகை ரியா கலந்து கொண்ட நிலையில் பொலிசார் அவரிடம் வி சாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் த ற்கொ லைக்கு இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை.

இந்த த ற்கொ லை வழக்கை தற்போது மும்பை பொலிசார் தீவிரமாக வி சாரணை செய்து வருகிறார்கள். தற்போது சுஷாந்த் சிங் காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை செய்ய பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

ரியா சுஷாந்த் சிங்கின் காதலி என்று எங்கும் அவர் உறுதியாக கூறவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியானது.

ரியா சுஷாந்த் சிங் உ டலை பார்ப்பதற்காக நேற்று மருத்துவமனைக்கு வந்ததோடு இறுதிச்சடங்கிலும் கலந்து கொண்டார். வெள்ளை உடையில் முகத்தை மூடிக்கொண்டு வந்தார். இவர் அங்கு வந்துவிட்டு சென்றதும், கண்ணீரோடு காரில் ஏறியதும் பெரிய வைரல் ஆகியுள்ளது.

இதற்கு முன்பு சுஷாந்த் சிங் அங்கிதா லோகான்டே என்று பெண்ணுடன் காதலில் இருந்தார். மொத்தம் 6 வருடம் இவர்கள் காதலில் இருந்துள்ளனர். இதனால் பொலிசார் இவரிடமும் விசாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதேபோல் சுஷாந்த் சிங்கின் நண்பர் நடிகர் மகேஷ் ஷெட்டியிடம் இதேபோல் பொலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.

முன்னதாக மும்பை வைல் பார்லே பகுதியிலுள்ள பவான் ஹன்ஸ் இடுகாட்டில் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
அவரது தந்தை இறுதி சடங்குகளை செய்த நிலையில், சுஷாந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பாஜக எம்.எல்.ஏ நீரஜ்குமார் சிங் பப்லூ, திரைப்பிரபலங்கள் ஷ்ரதா கபூர், க்ரீத்தி சனோன், முகேஷ் சாப்ரா உள்ளிட்டோரும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.