முதலில் பாடசாலை ஆரம்பித்த பின்னரே உயர்தர பரீட்சை தொடர்பில் ஆராயப்படும் : கல்வி அமைச்சு!!

875

உயர்தர பரீட்சை..

செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி உயர் தர பரீட்சையை நடத்துவதை சிறந்த முறையில் ஒத்தி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் உட்பட அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலையையும் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் சாதாரண உரிமையையும் கருத்திற் கொண்டு இந்த விடயம் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 20202 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கவனத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை நடத்தும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பாகி முதல் வாரத்தில் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக கல்வி அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இவ்வருடத்திற்குள் பாடசாலைகள் நடத்தப்பட்ட தினம் குறைவடைந்தமையினால்,

பாடத்திட்டங்களை நிவரத்தி செய்ய முடியாமல் போனதை அடுத்து உயர்தர பரீட்சை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவாலை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர்களினால் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-