பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான புதிய கட்டுப்பாடுகள்!!

1041


பாடசாலை மாணவர்கள்..



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் முதல் திறக்கப்படவுள்ளன.



ஜுலை மாதம் 6ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.




விசேடமாக போக்குவரத்து சேவை வழங்கும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும்.


பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் போது சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கமைய மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்லுதல்,

பாடசாலை மாணவர்கள் பயணித்த வாகனங்களில் கிருமி நீக்கம் செய்தல், மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருத்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் பாடசாலை மாணவர்களை அழைத்து பேருந்துகள் உட்பட வாகனங்களின் உரிமையாளர்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.