நிலாவில் சொந்தமாக இடம் வாங்கிய சுஷாந்த் : அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1930

சுஷாந்த் சிங்..

எம்எஸ் டோனி படத்தில் நடித்து புகழ்பெற்ற சுஷாந்த் சிங்கின் ம ரணம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே அ திர்ச்சியில் ஆழ்த்தியது.

பீகாரின் பாட்னாவில் உள்ள செயின்ட் கெய்ர்ன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை முடித்தார் சுஷாந்த். அடுத்து டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

படிப்பில் படு கில்லியாக விளங்கினார் சுஷாந்த், கல்லூரியில் முதல் மாணவனாக வலம் வந்ததுடன், ஏழு போட்டித் தேர்வுகளில் டாப் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளார்.

படித்துக் கொண்டிருக்கும் போதே பாலிவுட் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது, தமிழில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து பாலிவுட் பட உலகு சுஷாந்த்துக்கு கதவை திறக்க அடுத்தடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

வெற்றி, தோல்வி என மாறி மாறி ச றுக்கல்களையும் சந்தித்தார் சுஷாந்த், Physicsல் அதிக ஆர்வம் கொண்ட சுஷாந்த் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட தொலைநோக்கியையும் வாங்கியிருக்கிறார்.

அதனை பயன்படுத்தி சனி கிரகத்தின் அழகிய வளையங்களை காணப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஒரு திரைப்படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெற்று வந்தாராம், இதுமட்டுமா நிலவில் சொந்தமாக இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே நிலவில் சொந்தமாக இடம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

மாரே மஸ்கோவியன்ஸ் அல்லது ‘மஸ்கோவி கடல்’ என்று அழைக்கப்படும் நிலவின் தூரப் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை வாங்கி இருக்கிறார். சுஷாந்தின் சொத்து மதிப்பு ரூ 60 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.