வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட கர்ப்பிணி உட்பட 10 பேருக்கு கொரோனா!!

1973

கொரோனா..

டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தவகையில் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர் கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கொரனா தடுப்பு சிக்கிச்சை நிலைங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தவகையில் நேற்றைய தினம் நாடு திரும்பிய 168 பேர் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை விமான நிலையத்தில் நேற்று மேற்கொண்டதன் அடிப்படையில் இன்று அவர்களது பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் கர்ப்பணி பெண் உட்பட 10 பேருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒருவரை முல்லேரியா கொரனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் ஏனைய 9 பேரையும் காத்தான்குடியில் உள்ள கொரனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.